சித்தர்களை தரிசிக்க கோரக்கர் கூறிய மந்திரம்
பக்தியுட னெனதுகோர குண்டாப் பாறை
பருநீருஞ்
சுனையருவிப் பாய்ச்சல் புத்தேன்
நித்தியமும்
நிறைந்திருக்கும் மலையின் சாரல்
நீரொடுங்
கால்புனல்வாய் யருவிப் பக்கல்
சித்தர்களைக்
கண்டிடவென் பாறை யுற்றுச்
சிதறாமல்
நானோதும் மந்திரத்தை
முக்திபெறக்
கண்மூடி நாற்பத் தைந்துநாள்
முயங்காம
லிருந்துதோத் திரமும் பாரே
தீமையைக்
குகையிருக்கும் சித்தர் முத்தர்
தீவிரமாய்
உனக்குவரம் தருவார் வந்து
ஊமையென்ற
சங்குமையம் உதிக்கக் காட்டி
உண்மையுடன்
ஓர்மொழியை உபதே சிப்பார்
ஆமையெழுத் தானதோ
ராதி பீடம்
ஆதார மென்றபரை
நாட்டாஞ் சொல்வார்
தூமையென்ற
கதிகோடு அமுதர் பானத்
தூடாடுஞ்
சோதிநிலைச் சொரூப மீவார்
வாச்சடை யாளத்தா
ளுரைத்த மந்திரம்
வழங்கிடுவேன்
வையகத்தில் வஞ்ச மின்றி
நேர்பெறவே ஓம்
பசு பரபதிபக்ஷ ராஜ
நிரதிசய சித்ரூப
ஞான மூர்த்தோய்
தீர்க்க நேத்ராய
கண கம் கங் கெங் லங்
லிங்க் லங் லா
லீலம் ஆவ் பாவ் ஆம் ஊம்
பார்கவ்விய
சோதிமய வரப்பிர சன்ன
பாத தரிசியே கோரக்கர் சரணாய நமஸ்து.
நமனறவே நானுரைத்த
மந்திரத்தை
நாட்டமுடன்
செபமோதிச் சித்தி செய்து
அமைதியுடன்
எந்திரத்தை தகட்டிற் கீறி
அசையாமற்
கோரகுண்டாப் பாறை யெய்தி
தமதான காலடியில்
மிதித்து நின்று
தவறாம லோதிடுவாய்
மந்தி ரத்தை
சமர்த்தாக
வாசியைநீ யிழுத்து வாங்கிச்
சாற்றிடவே
சித்தர்வந் தாத ரிப்பார்.
இவ்வாறாக கோரக்க
நாதர் ரவிமேகலை 75ல் பாடல் 63-66
வரையில் சித்தர்களை
தரிசிக்க வழிவகை செய்து வைத்துள்ளார். ஆன்ம பலம் கொண்டவர், சித்தனாக நினைப்பவர் இந்த மந்திரத்தை 45
நாட்கள் சதுரகிரியில்
உள்ள கோரக்கர் குண்டா குகைக்கு சென்று முயற்சித்து பாக்கலாம் (குறிப்பு: அவரவர்
விருப்பத்துக்கு இணங்க. இதில் எங்கள் பங்கு எதுவும் இல்லை.)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக