கோரக்கர் மகா சித்தர்
கோரக்கர் பெயர் காரணம்:
அடுப்பின் சாம்பலில் இருந்து வெளிபட்டதால் கோர்க்கர் என பெயர் பெற்றார்.
கோரக்கர் ஜீவசமாதி அடைந்த இடம்:
ஊர்: வடக்குப் பொய்கைநல்லுார், நாகபட்டினம்.
கோரக்கர் பிறந்த வரலாறு:
கொல்லிமலையில் மகாதவம் செய்து வந்த மச்சேந்திரர் பொதியமலை நோக்கி பயணம் செய்ய அவாக்கொண்டு புறப்பட்டார். அவர் வான்மார்கமாக செல்லாமால் நடைப் பயணமாக செல்ல, செல்லும் வழியில் தாகம் ஏற்பட அருகாமையில் இருந்த ஓர் இல்லத்தில் தண்ணீர் கேட்க அவ்வீட்டிலிருந்த சிவராமதீட்சிதர் மனைவியார். மச்சேந்திரரை பார்க்க சிவனடியாராக தோன்றியமையால் அறுசுவை அன்னம் படைத்தார். அம்மையாரின் விருந்தோம்பலில் மனம்மகிழ்ந்த சித்தபெருமான். தங்கள் முகத்தில் ஏதோ தீறாகவலை தென்படுகிறதே என கேட்க அவரும் கடிந்தமனதோடு தமக்கு குழந்தை பாக்கியம் இல்லை எனக்கூற மச்சேந்திரர் அவர் குறைத்தீர்க திருநீறு அருளி செய்தார். இந்த தெய்வீக திருநீறை தாங்களும் தங்கள் துணைவரும் நீராடி சிவனை தியானித்து மேனியில் தரித்து மீதம் இருப்பதை நீரிலிட்டு அருந்திவர தாங்கள் தாய்மை அடைவீர் என்று ஆசி கூறி சென்றார்.
சிவாராம தீட்சிதர் மனைவி திருநீறு செய்தியை தனது பக்கத்து வீட்டாரிடம் சொல்ல, அவர்கள் போலி துறவி/ சன்யாசியாக இருக்க போகிறார் என மனக்குழப்பத்தை உண்டாக்கினார்கள். இதனால் மனம்மாறிய அம்மையார் திருநீறை தீயிலிட்டு குப்பைமேட்டில் கொட்டினார். பொதியமலைக்கு சென்ற மச்சேந்திரர் அருந்தவம் புறிந்து 10 வருடம் கழித்து கொல்லிமலை திரும்ப செல்ல விழைகையில் வழியில் தான் அருளாசி புறிந்த மகனை காணலாம் என எண்ணிணார். ஆகையால் அவர் தீட்சிதர் இல்லம் நாடி சென்றார் அங்கே அம்மையாரை சந்தித்து குழந்தையை பற்றி வினவ அவர் வெட்கியபடிய தாம் அத்திருநீறை தீயிட்டு குப்பையில் கொட்டிவிட்டேன் என்றார். சித்தர் தனது கோபத்தை மறைத்து குப்பை கொட்டிய இடத்தை காட்டுமாறு வேண்டினார். தாயாரும் குப்பைமேட்டை காட்ட, குப்பைமேட்டை நோக்கி கோரக்கா வா! எனறார் மச்சேந்திரர் உடனே பத்து வருட பாலகனாக குருவே சரணம்! எனச் சொல்லி வெளிவந்தார். இவ்வாறாக தோன்றியவரே கோரக்க மகா சித்தர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக