sitharkal secrets லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
sitharkal secrets லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 22 ஜனவரி, 2023

Korrakar Guru Sishya Relation

 கோரக்கர் குருசிஷ்ய உறவு



கோரக்கரின் குரு மச்சேந்திரர் ஒருமுறை தாம் புசிப்பதற்கு உணவு கொண்டுவர சொன்னார். குருவின் கட்டளைக்கு கீழ்ப்படிந்து அருகில் உள்ள கிராமத்தில் உணவை தானம் கேட்க சென்றார் கோரக்கர் அப்போது ஒரு அம்மையார் வடையை உணவாக கொடுத்தார்.  அதை குருவிற்கு புசிக்க கொடுத்தார் சீடர் வடையை சுவைத்து உண்ட மச்சேந்திரர் அதன் சுவையில் மயங்கி எனக்கு இதே வடையை மறுநாளும் கொண்டுவா? என கூறி சென்றார். அதன்படி மறுநாளும் முந்தைய நாள் வடை கொடுத்த தாய்மாரிடமே தானம் கேட்க! அவரோ  சோறை கொடுத்தார் இம்முறை, உடனே கோரக்கர் தனக்கு நேற்று கொடுத்தார் போல வடை தாரும் அம்மா என்றார். அம்மையாரோ  தினமும் வடையேது என்று சொன்னார். கோராக்கர் திரும்ப திரும்ப கேட்டுக்கொண்டே இருக்க, அம்மையாரோ தங்கள் குரு உமது கண்ணை கேட்டால் கூட குடுப்பீர் போலும் என்று வாய் தவறி சொல்ல, சொல்லும்போதே தனது கண்ணை பிடுங்கி இதை வைத்து கொண்டு வடை தாரும் என கூற பயந்துபோன பெண்மணி வடை செய்து கொடுத்தார் கோரக்கரிடம் அந்த வடையை கொண்டு குருவிடம் கொடுக்க குரு உண்டு மகிழ்ந்தார், பிறகு தமது சீடனின் கண்கள் பிடுங்கப்பட்டுள்ளதை பார்த்து, கோரக்கா! உமது கண்கள் எங்கே? என கேட்க! நடந்ததை சொன்னார் கோரக்கர். உடனே இழந்த கண்ணை திரும்பப்பெற செய்தார் மச்சேந்திரர். 

சனி, 21 ஜனவரி, 2023

Korakkar Sitthar

 கோரக்கர் மகா சித்தர்



கோரக்கர் பெயர் காரணம்:

அடுப்பின் சாம்பலில் இருந்து வெளிபட்டதால் கோர்க்கர் என பெயர் பெற்றார்.


கோரக்கர் ஜீவசமாதி அடைந்த இடம்:

ஊர்: வடக்குப் பொய்கைநல்லுார், நாகபட்டினம்.


கோரக்கர் பிறந்த வரலாறு:

கொல்லிமலையில் மகாதவம் செய்து வந்த மச்சேந்திரர் பொதியமலை நோக்கி பயணம் செய்ய அவாக்கொண்டு புறப்பட்டார். அவர் வான்மார்கமாக செல்லாமால் நடைப் பயணமாக செல்ல, செல்லும் வழியில் தாகம் ஏற்பட அருகாமையில் இருந்த ஓர் இல்லத்தில் தண்ணீர் கேட்க அவ்வீட்டிலிருந்த சிவராமதீட்சிதர் மனைவியார். மச்சேந்திரரை பார்க்க சிவனடியாராக தோன்றியமையால் அறுசுவை அன்னம் படைத்தார். அம்மையாரின் விருந்தோம்பலில் மனம்மகிழ்ந்த சித்தபெருமான். தங்கள் முகத்தில் ஏதோ தீறாகவலை தென்படுகிறதே என கேட்க அவரும் கடிந்தமனதோடு தமக்கு குழந்தை பாக்கியம் இல்லை எனக்கூற மச்சேந்திரர் அவர் குறைத்தீர்க திருநீறு அருளி செய்தார். இந்த தெய்வீக திருநீறை தாங்களும் தங்கள் துணைவரும் நீராடி சிவனை தியானித்து மேனியில் தரித்து மீதம் இருப்பதை நீரிலிட்டு அருந்திவர தாங்கள் தாய்மை அடைவீர் என்று ஆசி கூறி சென்றார்.


சிவாராம தீட்சிதர் மனைவி திருநீறு செய்தியை தனது பக்கத்து வீட்டாரிடம் சொல்ல, அவர்கள் போலி துறவி/ சன்யாசியாக இருக்க போகிறார் என மனக்குழப்பத்தை உண்டாக்கினார்கள். இதனால் மனம்மாறிய அம்மையார் திருநீறை தீயிலிட்டு குப்பைமேட்டில் கொட்டினார். பொதியமலைக்கு சென்ற மச்சேந்திரர் அருந்தவம் புறிந்து 10 வருடம் கழித்து கொல்லிமலை திரும்ப செல்ல விழைகையில் வழியில் தான் அருளாசி புறிந்த மகனை காணலாம் என எண்ணிணார். ஆகையால் அவர் தீட்சிதர் இல்லம் நாடி சென்றார் அங்கே அம்மையாரை சந்தித்து குழந்தையை பற்றி வினவ அவர் வெட்கியபடிய தாம் அத்திருநீறை தீயிட்டு குப்பையில் கொட்டிவிட்டேன் என்றார். சித்தர் தனது கோபத்தை மறைத்து குப்பை கொட்டிய இடத்தை காட்டுமாறு வேண்டினார். தாயாரும் குப்பைமேட்டை காட்ட, குப்பைமேட்டை நோக்கி கோரக்கா வா! எனறார் மச்சேந்திரர் உடனே பத்து வருட பாலகனாக குருவே சரணம்! எனச் சொல்லி வெளிவந்தார். இவ்வாறாக தோன்றியவரே கோரக்க மகா சித்தர்.


செவ்வாய், 13 மார்ச், 2018

சித்தர்கள் யார்?

சித்தர்கள் யார்?
இந்த கேள்விக்கு விடை காணத்தான் எத்தனை ஆன்மாக்கள் எங்குகின்றன. சித்தம் தெளிந்தவரே சித்தர். காயத்தை கற்பமாக மாற்றியவரே சித்தர். பேரானந்தத்தை அடைந்தவரே சித்தர் பெருமக்கள். இப்படி அடுக்கி கொண்டே போகலாம், விளக்கம் ஆயிரம் உள்ளன அவர்களை பற்றி, சொல்லில் அடங்கா சிறப்பை பெற்றோர் நம் சித்தர்கள். அவர்களின் வாழ்க்கை எளிமையிலும் எளிமையானது. எமக்கு தெரிந்த எம் சிற்றறிவுக்கு எட்டியதையே பதிகிறேன் பதியவும் இருக்கிறேன். இணைந்திருங்கள் சித்தர் பயணத்தில் உங்கள் தோழன்.