கோரக்கர் குருசிஷ்ய உறவு
கோரக்கரின் குரு மச்சேந்திரர் ஒருமுறை தாம் புசிப்பதற்கு உணவு கொண்டுவர சொன்னார். குருவின் கட்டளைக்கு கீழ்ப்படிந்து அருகில் உள்ள கிராமத்தில் உணவை தானம் கேட்க சென்றார் கோரக்கர் அப்போது ஒரு அம்மையார் வடையை உணவாக கொடுத்தார். அதை குருவிற்கு புசிக்க கொடுத்தார் சீடர் வடையை சுவைத்து உண்ட மச்சேந்திரர் அதன் சுவையில் மயங்கி எனக்கு இதே வடையை மறுநாளும் கொண்டுவா? என கூறி சென்றார். அதன்படி மறுநாளும் முந்தைய நாள் வடை கொடுத்த தாய்மாரிடமே தானம் கேட்க! அவரோ சோறை கொடுத்தார் இம்முறை, உடனே கோரக்கர் தனக்கு நேற்று கொடுத்தார் போல வடை தாரும் அம்மா என்றார். அம்மையாரோ தினமும் வடையேது என்று சொன்னார். கோராக்கர் திரும்ப திரும்ப கேட்டுக்கொண்டே இருக்க, அம்மையாரோ தங்கள் குரு உமது கண்ணை கேட்டால் கூட குடுப்பீர் போலும் என்று வாய் தவறி சொல்ல, சொல்லும்போதே தனது கண்ணை பிடுங்கி இதை வைத்து கொண்டு வடை தாரும் என கூற பயந்துபோன பெண்மணி வடை செய்து கொடுத்தார் கோரக்கரிடம் அந்த வடையை கொண்டு குருவிடம் கொடுக்க குரு உண்டு மகிழ்ந்தார், பிறகு தமது சீடனின் கண்கள் பிடுங்கப்பட்டுள்ளதை பார்த்து, கோரக்கா! உமது கண்கள் எங்கே? என கேட்க! நடந்ததை சொன்னார் கோரக்கர். உடனே இழந்த கண்ணை திரும்பப்பெற செய்தார் மச்சேந்திரர்.