செவ்வாய், 18 செப்டம்பர், 2018

பஞ்சாசர மந்திரம்

ஓம் நமசிவாய என்னும் நாமமே பஞ்சாசர மந்திரமாகும்.

ஒரு மணி நேரம் ஓம் நம சிவாய நாமம் சொன்னால்..
ஒரு மணி நேரம்,
1. நீங்கள் மௌன விரதம் இருப்பதாகிறது .
2. ஒரு மணி நேரம் நீங்கள் இறைவனுக்கு சம்மதமாக வாழ்ந்ததாகிறது .
3. ஒரு மணி நேரம் ஹரிச்சந்திரன் போல் உண்மையை பேசியதாகிறது .
4. ஒரு மணி நேரம் நீங்கள் உங்கள் மரணம் என்கிற பரிக்ஷைக்கு தயார் செய்தீர்கள் என்று ஆகிறது .
5. ஒரு மணி நேரம் பூஜை செய்ததாகிறது .
6. ஒரு மணி நேரம் உங்கள் பாவத்தை போக்கி கொள்ள பிராயசித்தம் செய்ததாகிறது .
7. ஒரு மணி நேரம் இறைவனை நோக்கி சில படிகள் முன்னேறியதாகிறது
8. ஒரு மணி நேரம் வேதம் ஓதுவதாகிறது.
9. ஒரு மணி நேரம் பெரியோர்கள் சொல் பேச்சு கேட்டதாகிறது.
10. ஒரு மணி நேரம் நீங்கள் பக்தராகிறீர்கள் .
11. ஒரு மணி நேரம் நீங்கள் மஹான்களால் ஆசீர்வதிக்கப்படுகிறீர்கள்.
12. ஒரு மணி நேரம் உங்கள் புலன்களை ஜெயித்தவர்கள் ஆகிறீர்கள். 13. ஒரு மணி நேரம் தியானம் செய்தவர் ஆகிறீர்கள்.
14. ஒரு மணி நேரம் சமாதியில் உள்ளவர் ஆகிறீர்கள்.
15. ஒரு மணி நேரம் ஒழுக்கமானவனாக ஆகிவிடுகிறீர்கள்.
16. ஒரு மணி நேரம் Positive ஆக இருக்கிறீர்கள்.
17. ஒரு மணி நேரம் உங்கள் போலித்தனமான வாழ்க்கையில் இருந்து விடுதலை அடைகிறீர்கள்.
18. ஒரு மணி நேரம் பாண்டுரங்கன் உங்கள் கை யை பிடித்துக்கொண்டு இருக்கிறான் .
19. ஒரு மணி நேரம் நீங்கள் பாதுகாக்கப்படுகிறீர்கள்.
20. ஒரு மணி நேரம் உங்களுக்கு தெரியாமல் உங்களை கோவிந்தன் ரசித்துக்கொண்டு இருக்கிறான்.
21. ஒரு மணி நேரம் மஹான்கள் வாயில் வந்த நாமத்தை நாமும் சொல்வதால் அவர்களுடைய பிரசாதத்தை உண்டவர்கள் ஆகிறீர்கள்.
22. இந்த ஒரு மணி நேரத்தினால் இறைவன் நீங்கள் செய்த தவறுகளை மறந்து நிற்கிறான்.
23. ஒரு மணி நேரம் யாகம் செய்தவர் ஆகிறீர்கள்.
24. ஒரு மணி நேரம் பகவானையே நீங்கள் கடனாளி ஆக்குகிறீர்கள். 25. ஒரு மணி நேரம் நீங்கள் கங்கையில் குளித்தவர் ஆகிறீர்கள்.
26. ஒரு மணி நேரம் யமுனையில் குளித்தவர் ஆகிறீர்கள்.
27. ஒரு மணி நேரம் காவிரியில் குளித்தவர் ஆகிறீர்கள்.
28. ஒரு மணி நேரம் பிருந்தாவன மண்ணில் உருண்டு பிரண்டவர் ஆகிறீர்கள்.
29. ஒரு மணி நேரம் கோடி கோடியான புண்யத்தை சம்பாதிகிறீர்கள். 30. எல்லாவற்றிர்க்கும் மேல் நாமம் வேறு இல்லை பகவான் வேறு இல்லை .
அந்த ஒரு மணி நேரம் இறைவனே உங்கள் நாக்கில் எச்சில் பட்டு கட்டுண்டு இருக்கிறான்...
பாக்கியம் செய்திருந்தால் மட்டுமே இறைவன் திரு நாமம் சொல்ல முடியும்...!!!

செவ்வாய், 13 மார்ச், 2018

சித்தர்கள் யார்?

சித்தர்கள் யார்?
இந்த கேள்விக்கு விடை காணத்தான் எத்தனை ஆன்மாக்கள் எங்குகின்றன. சித்தம் தெளிந்தவரே சித்தர். காயத்தை கற்பமாக மாற்றியவரே சித்தர். பேரானந்தத்தை அடைந்தவரே சித்தர் பெருமக்கள். இப்படி அடுக்கி கொண்டே போகலாம், விளக்கம் ஆயிரம் உள்ளன அவர்களை பற்றி, சொல்லில் அடங்கா சிறப்பை பெற்றோர் நம் சித்தர்கள். அவர்களின் வாழ்க்கை எளிமையிலும் எளிமையானது. எமக்கு தெரிந்த எம் சிற்றறிவுக்கு எட்டியதையே பதிகிறேன் பதியவும் இருக்கிறேன். இணைந்திருங்கள் சித்தர் பயணத்தில் உங்கள் தோழன்.