சனி, 28 ஜனவரி, 2023

சித்தர்களை தரிசிக்க மந்திரம்

 

சித்தர்களை தரிசிக்க கோரக்கர் கூறிய மந்திரம்

கோரக்கர் தனது ரவிமேகலை 75 நூலில் எக்காலத்திலும் சித்தர்களை தரிசிக்க நம் உலக மாந்தர்க்கு ஓர் மந்திர உபதேசம் மற்றும் அப்பியாசம் செய்யும் முறைகளையும் தமது பாடல் வழியாக போதனை செய்துள்ளார். அப்பாடல் வரிகள் உங்களுக்கா தொகுத்து வழங்குவதில் மகிழ்சி அடைகிறேன். பாடல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

 

பக்தியுட னெனதுகோர குண்டாப் பாறை

பருநீருஞ் சுனையருவிப் பாய்ச்சல் புத்தேன்

நித்தியமும் நிறைந்திருக்கும் மலையின் சாரல்

நீரொடுங் கால்புனல்வாய் யருவிப் பக்கல்

சித்தர்களைக் கண்டிடவென் பாறை யுற்றுச்

சிதறாமல் நானோதும் மந்திரத்தை

முக்திபெறக் கண்மூடி நாற்பத் தைந்துநாள்

முயங்காம லிருந்துதோத் திரமும் பாரே

 

தீமையைக் குகையிருக்கும் சித்தர் முத்தர்

தீவிரமாய் உனக்குவரம் தருவார் வந்து

ஊமையென்ற சங்குமையம் உதிக்கக் காட்டி

உண்மையுடன் ஓர்மொழியை உபதே சிப்பார்

ஆமையெழுத் தானதோ ராதி பீடம்

ஆதார மென்றபரை நாட்டாஞ் சொல்வார்

தூமையென்ற கதிகோடு அமுதர் பானத்

தூடாடுஞ் சோதிநிலைச் சொரூப மீவார்

 

வாச்சடை யாளத்தா ளுரைத்த மந்திரம்

வழங்கிடுவேன் வையகத்தில் வஞ்ச மின்றி

நேர்பெறவே ஓம் பசு பரபதிபக்ஷ ராஜ

நிரதிசய சித்ரூப ஞான மூர்த்தோய்

தீர்க்க நேத்ராய கண கம் கங் கெங் லங்

லிங்க் லங் லா லீலம் ஆவ் பாவ் ஆம் ஊம்

பார்கவ்விய சோதிமய வரப்பிர சன்ன

பாத தரிசியே கோரக்கர் சரணாய நமஸ்து.

ஓம் கோரக்க தேவாய நமக.

 

நமனறவே நானுரைத்த மந்திரத்தை

நாட்டமுடன் செபமோதிச் சித்தி செய்து

அமைதியுடன் எந்திரத்தை தகட்டிற் கீறி

அசையாமற் கோரகுண்டாப் பாறை யெய்தி

தமதான காலடியில் மிதித்து நின்று

தவறாம லோதிடுவாய் மந்தி ரத்தை

சமர்த்தாக வாசியைநீ யிழுத்து வாங்கிச்

சாற்றிடவே சித்தர்வந் தாத ரிப்பார்.

 

இவ்வாறாக கோரக்க நாதர் ரவிமேகலை 75ல் பாடல் 63-66 வரையில் சித்தர்களை தரிசிக்க வழிவகை செய்து வைத்துள்ளார். ஆன்ம பலம் கொண்டவர், சித்தனாக நினைப்பவர் இந்த மந்திரத்தை 45 நாட்கள் சதுரகிரியில் உள்ள கோரக்கர் குண்டா குகைக்கு சென்று முயற்சித்து பாக்கலாம் (குறிப்பு: அவரவர் விருப்பத்துக்கு இணங்க. இதில் எங்கள் பங்கு எதுவும் இல்லை.)


வியாழன், 26 ஜனவரி, 2023

கோவில் விளக்கம்/என்றால் என்ன?

 கோவில் விளக்கம் 

கோவில் = கோ + இல். கோ என்றால் இறைவன். இல் என்றால் இல்லம் அல்லது வீடு. இறைவன் குடி கொண்டிருக்கும் இடமே கோவில் ஆகும்.


மனித உடலும் கோவிலும் 

நமது உடலானது கோவிலுக்கு நிகரானது. மனித உடலானது ஒன்றின் மேல் ஒன்றாக அமைந்த ஐந்து அடுக்குகள் மற்றும் ஏழு படிகளை கொண்டது.


உணவு உடம்பு, பிராண உடம்பு, அறிவு உடம்பு, மன உடம்பு, இன்ப உடம்பு என ஐந்து உடல்கலே கோவிலின் பிரகாரத்துவம் போன்றது.


மனித உடலும் கோவில் அமைப்பும் 

1. கால் பாதம் --> கோபுரம்.

2. அடிவயிற்று பகுதி --> கோடி மரமும் பலிபீடமும்.

3. அடிவயிற்றுக்கும் தொப்புளுக்கும் இடையில் உள்ள பகுதி --> அதிகார நந்தி.

4. தொப்புள் பகுதி --> அம்மன் இருக்கும் இடம்.

5. இருதய பகுதி --> நடராஜர் இருக்கும் இடம்.

6. தொண்டை பகுதி --> வாகன நந்தி இருக்கும் இடம்.

7. புருவ மத்திய பகுதி --> இறைவன் இருக்கும் இடம்.

8. மூளைப்பகுதி --> இறைவனின் தனிப்பெருங்கருணை ஒளி வீசும் இடம்.


temple and body


செவ்வாய், 24 ஜனவரி, 2023

ஆயில் புல்லிங்

 ஆயில் புல்லிங் என்றால் என்ன?



எண்ணெய் கொப்பளித்தல் (ஆயில் புல்லிங்) இந்தியாவில் பல நூறு ஆண்டுகளாக பின்பற்றப்படும் ஆயுர்வேத சிகிச்சை முறையாகும். முப்பதுக்கும் மேற்பட்ட உடல் சார்ந்த நோய்களுக்கு எண்ணெய் கொப்பளித்தல் மிக சிறந்த தீர்வாக உள்ளது. இது மேலும் வாய் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு சிறந்த நிவாரணியாக அமைகிறது. ஆயுர்வேத மருத்துவத்தில் எண்ணெய் கொப்பளித்தல் என்பது கவாலா - கண்டுஷா என அழைக்கப்படுகிறது.

கவாலா என்றால் கொப்பளித்தல் மற்றும் கண்டுஷா என்றால் வாய்க்குள் திரவத்தை வைத்துக்கொள்ளுதல் என்று அறியப்படுகிறது. ஒரு டீஸ்புன் எண்ணையை எடுத்து வாயில் இட்டு சிறிது நேரம் கொப்பளித்துக்கொண்ட இருக்கவும் எண்ணெய் தண்ணீர் பதத்துக்கு மாறி வெண்மை கலந்த பழுப்பு நிறத்தை அடைந்தவுடன் வெளியே துப்பிவிடவும்.


ஆயில் புல்லிங் எப்பொழுது செய்யலாம்?

காலையில் வெறும் வயிற்றில் செய்வது மிக சிறந்த பலன்களை தரும்.

குறிப்பு: ஆயில் புல்லிங் செய்த பின்பு தண்ணீர் விட்டு வாயை நன்கு சுத்தம் செய்து கொள்ளவும். வாய் கொப்பளித்த எண்ணையை எக்காரணம் கொண்டும் விழுங்கிவிட கூடாது.


எந்த எண்ணெய் பயன்படுத்தலாம்?

செக்கில் ஆடிய தூய்மையான நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை பயன்படுத்தலாம்.

பலன்கள்: ஆயில் புல்லிங் பற்களில் பாக்டீரியா கிருமிகள் சேர்வதையும், துர்நாற்றம் விசுவதையும், பல் செல்கள் பாதிப்பு அடைவதையும் தடுக்கிறது. ஆயில் புல்லிங் பற்கள் மற்றும் ஈறுகளுக்கு நன்மை சேர்ப்பது மட்டுமல்லாமல், நம் உடம்பின் உள்ளுறுப்புகளை (இன்டெர்னல் கிளின்சிங்) சுத்தம் செய்வதிலும் நன்மை பயக்குகின்றது.


திங்கள், 23 ஜனவரி, 2023

சிறு தானியங்கள்

சிறு தானியங்களும் உடல் நன்மைகளும்





திணை- தாய்ப்பால் சுரக்கும், நோய் எதிர்ப்பு சக்தி மிகும்.


வரகு- மாதவிடாய் பிரச்சனை தீரும். உடல் எடையை குறைக்கும், எலும்பு உறுதியாகும், சக்கரை அளவு குறையும்.


சாமை- ஆண்களுக்கு நல்லது.


கேழ்வரகு- எலும்பு உறுதியாக்கும்.


கம்பு -தாது விருத்தி, உடல் குளிர்ச்சி, இளநரை போக்கும்.


மாப்பிள்ளை சம்பா- வயிற்றுப்புண், கேன்சர் நீங்கும்.

ஹீமோகுளோபின் அளவு அதிகமாகும்.


கருங்குருவை- விஷக்கடி யானைக்கால், கீழ்வாதம், 

குஷ்டத்தை போக்கும்.


கருப்பு கவுனி-

விட்டமின் பி12 நிறைந்தது. ஆன்ட்டி ஆக்சிடென்ட் நிறைந்தது. உணவுக் குழாய் புற்றுநோய் இதய நோய் பாதுகாப்பு.



ஞாயிறு, 22 ஜனவரி, 2023

Korrakar Guru Sishya Relation

 கோரக்கர் குருசிஷ்ய உறவு



கோரக்கரின் குரு மச்சேந்திரர் ஒருமுறை தாம் புசிப்பதற்கு உணவு கொண்டுவர சொன்னார். குருவின் கட்டளைக்கு கீழ்ப்படிந்து அருகில் உள்ள கிராமத்தில் உணவை தானம் கேட்க சென்றார் கோரக்கர் அப்போது ஒரு அம்மையார் வடையை உணவாக கொடுத்தார்.  அதை குருவிற்கு புசிக்க கொடுத்தார் சீடர் வடையை சுவைத்து உண்ட மச்சேந்திரர் அதன் சுவையில் மயங்கி எனக்கு இதே வடையை மறுநாளும் கொண்டுவா? என கூறி சென்றார். அதன்படி மறுநாளும் முந்தைய நாள் வடை கொடுத்த தாய்மாரிடமே தானம் கேட்க! அவரோ  சோறை கொடுத்தார் இம்முறை, உடனே கோரக்கர் தனக்கு நேற்று கொடுத்தார் போல வடை தாரும் அம்மா என்றார். அம்மையாரோ  தினமும் வடையேது என்று சொன்னார். கோராக்கர் திரும்ப திரும்ப கேட்டுக்கொண்டே இருக்க, அம்மையாரோ தங்கள் குரு உமது கண்ணை கேட்டால் கூட குடுப்பீர் போலும் என்று வாய் தவறி சொல்ல, சொல்லும்போதே தனது கண்ணை பிடுங்கி இதை வைத்து கொண்டு வடை தாரும் என கூற பயந்துபோன பெண்மணி வடை செய்து கொடுத்தார் கோரக்கரிடம் அந்த வடையை கொண்டு குருவிடம் கொடுக்க குரு உண்டு மகிழ்ந்தார், பிறகு தமது சீடனின் கண்கள் பிடுங்கப்பட்டுள்ளதை பார்த்து, கோரக்கா! உமது கண்கள் எங்கே? என கேட்க! நடந்ததை சொன்னார் கோரக்கர். உடனே இழந்த கண்ணை திரும்பப்பெற செய்தார் மச்சேந்திரர். 

சனி, 21 ஜனவரி, 2023

Korakkar Sitthar

 கோரக்கர் மகா சித்தர்



கோரக்கர் பெயர் காரணம்:

அடுப்பின் சாம்பலில் இருந்து வெளிபட்டதால் கோர்க்கர் என பெயர் பெற்றார்.


கோரக்கர் ஜீவசமாதி அடைந்த இடம்:

ஊர்: வடக்குப் பொய்கைநல்லுார், நாகபட்டினம்.


கோரக்கர் பிறந்த வரலாறு:

கொல்லிமலையில் மகாதவம் செய்து வந்த மச்சேந்திரர் பொதியமலை நோக்கி பயணம் செய்ய அவாக்கொண்டு புறப்பட்டார். அவர் வான்மார்கமாக செல்லாமால் நடைப் பயணமாக செல்ல, செல்லும் வழியில் தாகம் ஏற்பட அருகாமையில் இருந்த ஓர் இல்லத்தில் தண்ணீர் கேட்க அவ்வீட்டிலிருந்த சிவராமதீட்சிதர் மனைவியார். மச்சேந்திரரை பார்க்க சிவனடியாராக தோன்றியமையால் அறுசுவை அன்னம் படைத்தார். அம்மையாரின் விருந்தோம்பலில் மனம்மகிழ்ந்த சித்தபெருமான். தங்கள் முகத்தில் ஏதோ தீறாகவலை தென்படுகிறதே என கேட்க அவரும் கடிந்தமனதோடு தமக்கு குழந்தை பாக்கியம் இல்லை எனக்கூற மச்சேந்திரர் அவர் குறைத்தீர்க திருநீறு அருளி செய்தார். இந்த தெய்வீக திருநீறை தாங்களும் தங்கள் துணைவரும் நீராடி சிவனை தியானித்து மேனியில் தரித்து மீதம் இருப்பதை நீரிலிட்டு அருந்திவர தாங்கள் தாய்மை அடைவீர் என்று ஆசி கூறி சென்றார்.


சிவாராம தீட்சிதர் மனைவி திருநீறு செய்தியை தனது பக்கத்து வீட்டாரிடம் சொல்ல, அவர்கள் போலி துறவி/ சன்யாசியாக இருக்க போகிறார் என மனக்குழப்பத்தை உண்டாக்கினார்கள். இதனால் மனம்மாறிய அம்மையார் திருநீறை தீயிலிட்டு குப்பைமேட்டில் கொட்டினார். பொதியமலைக்கு சென்ற மச்சேந்திரர் அருந்தவம் புறிந்து 10 வருடம் கழித்து கொல்லிமலை திரும்ப செல்ல விழைகையில் வழியில் தான் அருளாசி புறிந்த மகனை காணலாம் என எண்ணிணார். ஆகையால் அவர் தீட்சிதர் இல்லம் நாடி சென்றார் அங்கே அம்மையாரை சந்தித்து குழந்தையை பற்றி வினவ அவர் வெட்கியபடிய தாம் அத்திருநீறை தீயிட்டு குப்பையில் கொட்டிவிட்டேன் என்றார். சித்தர் தனது கோபத்தை மறைத்து குப்பை கொட்டிய இடத்தை காட்டுமாறு வேண்டினார். தாயாரும் குப்பைமேட்டை காட்ட, குப்பைமேட்டை நோக்கி கோரக்கா வா! எனறார் மச்சேந்திரர் உடனே பத்து வருட பாலகனாக குருவே சரணம்! எனச் சொல்லி வெளிவந்தார். இவ்வாறாக தோன்றியவரே கோரக்க மகா சித்தர்.